ADVERTISEMENT

“12 வருட கனவு நிறைவேறியது”: கவின்

Published On:

| By Selvam

டாடா படத்தின் வெற்றியின் மூலம் 12 வருட கனவு நிறைவேறியதாக நடிகர் கவின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

இன்று முதல் டாடா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “திரையரங்குகளில் நீங்கள் கொடுத்த ஆதரவு நாங்கள் நினைத்ததை விட பெரியது. நல்ல படத்தை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த படம் எனக்கு 12 வருட கனவு என்று படம் ரிலீஸ் ஆன அன்று நான் சொல்லியிருந்தேன். அதை நினைவாக்கிய அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல படத்தை எடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது சவாலாக உள்ளது.

ADVERTISEMENT

அதற்கு காரணமாக இருந்த ஒலிம்பியா மூவிஸ், ரெட் ஜெயண்ட், பத்திரிகை, ஊடகம் அனைவருக்கும் நன்றி. காசு கொடுத்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. நல்ல படத்தை மக்கள் காப்பாற்றுவார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தியேட்டரில் கிடைத்த வரவேற்பு, ஓடிடியிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். நிச்சயமாக மக்களை மகிழ்விக்கின்ற படங்களை நான் தொடர்ந்து பண்ணுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : எஸ்எஸ்சி அறிவிப்பு!

ADVERTISEMENT

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share