கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து காரணமாக இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு, பெங்களூருவில் இருந்து தர்பங்கா நோக்கி சென்ற பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது.
இதன்காரணமாக இந்த வழித்தடம் வழியாக செல்லும் சில ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
திருப்பதி – புதுச்சேரி மெமு ரயில் – 16111,
புதுச்சேரி – திருப்பதி மெமு ரயில் 16112,
சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் – 16203, 16053, 16057,
திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் – 16204, 16054, 16058,
அரக்கோணம் – புதுச்சேரி ரயில் -16401
கடப்பா – அரக்கோணம் மெமு ரயில்- 16402
திருப்பதி – சென்னை சென்ட்ரல் மெமு ரயில் -06727
அரக்கோணம் – திருப்பதி மெமு ரயில் 06753
திருப்பதி – அரக்கோணம் மெமு ரயில், 06754
விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில்,
சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்,
சூலூர்பேட்டை – நெல்லூர் மெமு எக்ஸ்பிரஸ், நெல்லூர் – சூலூர்பேட்டை மெமு எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் – விஜயவாடா செல்லும், சென்ட்ரல் – விஜயவாடா வரும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, கன்னியாகுமரி – நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் – 12641,
சென்னை சென்ட்ரல் – லக்னோ சந்திப்பு எக்ஸ்பிரஸ் 16093,
சென்னை சென்ட்ரல் – நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் – 12611,
ஹவுராவுக்கு புறப்பட்ட சென்னை சென்ட்ரல் மெயில் – 12839,
அகமதாபாத் – சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் – 12655,
பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் – 22644, புது டெல்லி –
சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் – 12616,
காக்கிநாடா துறைமுகம் – செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் – 17644
ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்து அல்லது திருப்பிவிடப்பட்ட ரயில்கள் தொடர்பான விவரங்களை 04425354151 0442435499 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பெறலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா