காத்து வாக்குல ரெண்டு காதல்: இத்தனை கோடியா?

Published On:

| By Balaji

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. அனிருத் இசையில் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும்

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும், சில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம்.

ADVERTISEMENT

படம் அறிவிக்கப்பட்டபோது இப்படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் படத்தின் முதல் பார்வை சுவரொட்டி வெளியானது. அதன்படி, படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட இருக்கிறது படக்குழு. இந்தப் படத்துக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் ஓடிடி டிஜிட்டல் உரிமை இரண்டையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அம்பலவாணன்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share