தமிழகத்தில் இன்று (மே 2) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் கத்தரி வெயில் கணக்கிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் வரும் 4ஆம் தேதி தொடங்கி 28-ந்தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை!
பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்தே சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கரூர், ஈரோடு, திருச்சி, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது.
தொடர்ந்து ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
பிரதீப் ஜான் ட்விட்!
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இன்றைய தினம் வெப்பம் அதிகமாக இருக்கும்.. ஆனால் இதுபோன்ற வெப்பநாட்களுக்கு பிறகு எப்போதும் ஒரு குட்நியூஸ் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனால் நேற்று ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது போன்று, தமிழ்நாட்டிலும் வேறு சில இடங்களிலும் வெயிலுக்கு நடுவே மழையை எதிர்பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தக்லைப் – ராயன் படங்களால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு ஆபத்து?
அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்கள்: சென்னை சென்ட்ரல் முதலிடம்!