பிரபாஸின் கல்கி: கமல்ஹாசனின் ஆக்‌ஷன் ஆரம்பம்!

Published On:

| By Monisha

kasmalhassan joins kalki 2898 AD

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ’மகாநதி’ படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’கல்கி 2898 AD’. இந்த படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் ரோலில் நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்கி படத்தின் க்ளிம்ஸ் வீடியோவில் கமல்ஹாசனின் காட்சிகள் இடம்பெறவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது கல்கி படத்தின் படப்பிடிப்பு குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது.  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு கல்கி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் கல்கி படப்பிடிப்பில் தற்போது நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நடிக்க தொடங்கியுள்ளார். இந்த படத்திற்காக கமல்ஹாசனுக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகும் கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் குறைந்த நேரம் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி!

பருத்திவீரன் பட பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? – கரு பழனியப்பன் விளாசல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share