’இஸ்ரேலியரா? கடையை விட்டு இறங்குங்கள்’ : தேக்கடியில் காஷ்மீர் வியாபாரிகள் செய்த காரியம்!

Published On:

| By Kumaresan M

கேரள மாநிலம் தேக்கடிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் எப்போதும் தேக்கடி களைக்கட்டும். தேக்கடியில் காஷ்மீரை சேர்ந்த பல வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் தேக்கடிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் காஷ்மீரை சேர்ந்த வியாபாரிகளின் கடைக்குள் சென்றுள்ளார். பேசிக் கொண்டிருக்கும் போது, எங்கிருந்து வருகிறீர்கள் என்று வியாபாரி கேட்டுள்ளார். அதற்கு, அந்த சுற்றுலாப்பயணி இஸ்ரேலில் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இஸ்ரேலில் இருந்து வந்ததாக கூறியதும், அந்த கடைக்காரர் கடும் ஆத்திரமடைந்தார். உடனடியாக, எங்கள் கடையை விட்டு இறங்குங்கள் என்று கூறி அவரிடத்தில்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் கூடியது.

தொடர்ந்து, அங்கிருந்த மற்ற வியாபாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். விஷயம் வெளியே தெரிந்தால் சுற்றுலா தொழில் பாதிக்கும் என்பதால் உடனடியாக காஷ்மீர் வியாபாரிகளை இஸ்ரேல் சுற்றுலாப்பயணியிடத்தில்  மன்னிப்பு கேட்க வைத்தனர்.

இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. எனினும், இந்தியாவுக்கு வரும்  சுற்றுலாப்பயணிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டியது அவசியம் என்பதை வியாபாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பிரச்னை என்றால், அதை சுற்றுலாப்பயணிகளிடம் காட்டுவது நியாயம் இல்லை. அதோடு, இஸ்ரேல் நாட்டுக்கு சென்று  சுற்றுலாப்பயணிகள் மீடியாக்களிடம் விஷயத்தை பகிர்ந்து கொண்டால், நாளைக்கு இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கு யோசிப்பார்கள். எந்த விஷயத்தையும் உணர்ச்சிக்கரமாக பார்க்காமல் லாஜிக்காக அணுக வேண்டுமென்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ’நான் நலமுடன் இருக்கிறேன்’ : வீடியோவில் மருத்துவர் பாலாஜி

சரிந்து வரும் தங்கம் விலை… வாங்குவதற்கு சரியான டைம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share