தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலி.. தமிழர்களின் நிலை… முதல்வர் ஸ்டாலின் உடனடி ஆக்‌ஷன்!

Published On:

| By Aara

ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும்
சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. kashmir terrorist attack CM Stalin immediate action

காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தொடர்பாக ஏப்ரல் 22 இரவு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

“ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக
முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ADVERTISEMENT

இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையாளர் (Resident Commissioner) அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான அப்தாப் ரசூல் ஐ.ஏ.எஸ்.சை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. kashmir terrorist attack CM Stalin immediate action

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share