காசி தமிழ் சங்கமம் 4.0.. தமிழ்நாட்டில் இருந்து முதல் ரயில் புறப்பட்டது

Published On:

| By Mathi

Vanakkam Kasi 4.0

மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள காசி தமிழ் சங்கமம் 4.0, நிகழ்ச்சி, டிசம்பர் 2-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் (காசி) நடைபெற உள்ளது.

காசி தமிழ் சங்கமம் 4.0 -ல் பங்கேற்பவர்களுடன் முதல் ரயில் கன்னியாகுமரியிலிருந்து ;புறப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து 45 பேரும் திருச்சியில் 86 பேரும் சென்னையிலிருந்து 87 பேரும் என மொத்தம் 216 பேர் வாரணாசி செல்கின்றனர். இந்தக் குழுவில் 50 தமிழ் இலக்கிய வல்லுநர்கள், 54 கலாச்சார அறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கைவினைஞர்கள், நாட்டுப்புற பாடகர்கள் மற்றும் பயிற்றுனர்கள், ஆன்மீக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

காசி தமிழ் சங்கமம் 4.0, டிசம்பர் 2 அன்று வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் முறைப்படித் தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் விழாவில், தமிழ்நாட்டிலிருந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரயாக்ராஜ், அயோத்தி, வாரணாசி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள கலாச்சார மையங்களில் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பிரதிநிதிகள் காசி விஸ்வநாதர் கோயில், நமோ காட், அனுமான் காட், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சாரநாத் மற்றும் அயோத்தி கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டின் தென்காசியில் இருந்து உத்தரபிரதேசத்தின் காசிக்கு அகத்திய முனிவர் வாகனப் பேரணி டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி டிசம்பர் 12 ஆம் தேதி வாரணாசியில் முடிவடையும்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share