ADVERTISEMENT

காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழ்நாட்டில் இருந்து உ.பி. பனாரசுக்கு 7 சிறப்பு ரயில்கள்!

Published On:

| By Mathi

Kashi Spl Trains

காசி தமிழ் சங்கமம் 4.0க்காக தமிழ்நாட்டிலிருந்து உ.பி. பனாரஸூக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையிலான கலாச்சார இணைப்புகளை வலுப்படுத்த நடத்தப்படும் காசி தமிழ் சங்கமம் 4.0-ல் பங்கேற்பதற்காக

ADVERTISEMENT

கன்னியாகுமரி
சென்னை
கோயம்புத்தூரிலிருந்து
உ.பி. பனாரசுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

முதல் ரயில் நவம்பர் 29-ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டது.

ADVERTISEMENT

சென்னையிலிருந்து நேற்று 2-வது சிறப்பு ரயில் புறப்பட்டது.

இன்று டிசம்பர் 3-ம் தேதி கோயம்புத்தூரிலிருந்தும், 6-ம் தேதி சென்னையிலிருந்தும், 7-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்தும், 9-ம் தேதி கோயம்புத்தூரிலிருந்தும், 12-ம் தேதி சென்னையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

ADVERTISEMENT

மறு மார்க்கத்தில் பனாரஸிலிருந்து கன்னியாகுமரிக்கு டிசம்பர் 5-ம் தேதியும், சென்னைக்கு 7-ம் தேதியும், கோயம்புத்தூருக்கு டிசம்பர் 9-ம் தேதியும், சென்னைக்கு 11-ம் தேதியும், கன்னியாகுமரிக்கு 13-ம் தேதியும், கோயம்புத்தூருக்கு 15-ம் தேதியும், சென்னைக்கு 17-ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share