கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி இன்று அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கரூர் மக்களவை தொகுதி எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் எம்.பி. ஜோதிமணி தமது எக்ஸ் பக்கத்தில், “இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாடாளுமன்றத்தில் சந்தித்து, கரூர் கொடுந்துயரில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிதியுதவியை வழங்குமாறு கேட்டிருந்தேன்.
சற்றுமுன்பு நிதி அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைத்து, பாதிக்கப்பட்ட எமது மக்களின் வங்கிக் கணக்கில் அறிவிக்கப்பட்டிருந்த நிதியுதவி வரவு வைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்கள். கவனத்திற்கு கொண்டு சென்றதும் ,உடனடியாக செயல்பட்டு நிதியை வங்கிக் கணக்கில் செலுத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
