கரூர் துயரம்.. விசாரணை அதிகாரி மாற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Police explain the reasons behind the Karur stampede

கரூர் துயரம் தொடர்பாக விசாரிக்க கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரை கூட்டம் கடந்த செப்டம்பர்-27ம் தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக கூடுதல் எஸ்.பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கரூர் சம்பவம் குறித்து டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share