கார்த்தி படத்தின் ஓடிடி உரிமையினை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றி இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் அவரின் 26-வது படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில் கார்த்தியுடன் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக ‘மெய்யழகன்’, ‘கைதி 2’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘சர்தார் 2’ ஆகிய படங்கள் உருவாகவிருக்கின்றன.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள்!
இளையராஜாவுடன் ‘கூட்டணி’ அமைத்த வெற்றிமாறன்
பட்டியலில் பெயர் மிஸ்ஸிங்… மாசெக்கள் கூட்டத்தைப் புறக்கணித்த எஸ்.ஆர். சிவலிங்கம்