‘மெய்யழகன்’, ‘வா வாத்தியார்’ படங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, ‘சர்தார் 2’ படத்திற்கு நடிகர் கார்த்தி தயாராகி வருகிறார்.
கார்த்தி தற்போது நடித்து வரும் ‘மெய்யழகன்’ படத்தை ’96’ திரைப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்க, சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஸ்வாதி கொன்டே, இளவரசு என பலர் நடிக்கிறார்கள். மெய்யழகன் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டப்பிங், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதி முடிவானதும், படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோவை வெளியிட படக்குழு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
கார்த்தி நடிக்கும் மற்றொரு படமான ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. நலன் குமாரசாமி இயக்கும் இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் என பலரும் நடிக்கின்றனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த 2 படங்களுக்கான படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்கார் 2’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி 2’, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் 2’ என அடுத்தடுத்த படங்கள் கார்த்திக்கு வரிசை கட்டி நிற்கின்றன. ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் செப்டம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டி20 உலகக்கோப்பை: நியூயார்க் மைதானம் அதுக்கு சரிப்பட்டுவராது: கிளாசன் ஓபன் டாக்!