திருவண்ணாமலை வழியாக செல்கிறீர்களா? : போலீஸ் முக்கிய தகவல்!

Published On:

| By Kavi

வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் குவிய உள்ளனர். சுமார் 40 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர்.

இந்நிலையில் வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, போக்குவரத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் திருவண்ணாமலை காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் போலீஸ் இன்று (டிசம்பர் 11) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் (HMV லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக வாகனங்கள் (LMV – கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 12.12.2024 காலை 08.00 மணி முதல் 15.12.2024 காலை 06.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் கீழ் காணும் மாற்றுப்பாதையில் செல்லலாம்…

ADVERTISEMENT

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விழுப்புரம்,கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர் வாணியம்பாடி – வேலூர் -ஆற்காடு – செய்யாறு – வந்தவாசி வழியாக செல்லவும். இந்த வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

விழுப்புரம்,கடலூர், புதுச்சேரி,திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி -செய்யாறு ஆற்காடு – வேலூர் – வாணியம்பாடி –பர்கூர் வழியாக செல்லவும். இந்த வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை. வழியாக செல்ல அனுமதி இல்லை.

திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூர் ஆற்காடு செய்யாறு -வந்தவாசி வழியாக செல்லவும். இந்த வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி. வழித்தடங்களிலிருந்து திருப்பதி,கே.ஜி.எப், வேலூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி – செய்யார் ஆற்காடு வேலூர் வழியாக செல்லவும். இந்த வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான தர்மபுரி – தொப்பூர் சேலம் வாழப்பாடி -ஆத்தூர் வழியாக செல்லவும். இந்த வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.

விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான ஆத்தூர் – வாழப்பாடி – சேலம் – தொப்பூர் -தர்மபுரி வழியாக செல்லவும். இந்த வாகனங்கள் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை!

ஆம்ஸ்ட்ராங் கொலை… நீதிமன்றத்துக்குள் வெடிகுண்டு வந்தது எப்படி?: நீதிபதிகள் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share