கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: விசாகம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

விசாகம்

பொறுமையாகச் செயல்பட்டால்  இஷ்டங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். வீண் ரோஷம், வேண்டாத கோபம் அறவே தவிர்ப்பது அவசியம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும்.

எந்த சமயத்திலும் வீண் படபடப்பும், பரபரப்பும் வேண்டாம். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காதீர்கள். பணிசார்ந்த ரகசியங்களைப் பரமரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். தம்பதியரிடையே சுமுகமான சூழல்நிலவும். வெளியிடத்துக் கோபத்தை வீட்டுக்கு சுமந்து செல்ல வேண்டாம். வரவுடன் செலவும் சேர்ந்தே வரும். அநாவசிய கேளிக்கை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு உறவினர் சேர்க்கையால் நன்மைகள் உண்டாகும்.

தொழிலில் உழைப்புக்குத் தக்கவகையில் வளர்ச்சி உருவாகும். பெரிய முதலீடுகளை குடும்பத்தினர் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.

அரசியல் துறையினர், உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். அரசுப்பணியில் பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனமாக இருங்கள்.

கலைஞர்கள், சினிமா, படைப்பாளிகள் சிற்றின்பம் தவிர்த்தால்,சீக்கிரம் முன்னேறலாம். மாணவர்கள், களியாட்டங்களில் கவனத்தை திசைதிருப்பாமல் இருப்பது நல்லது.

பயணத்தில் வேகம்கூடவே கூடாது. ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகளை உடனே கவனியுங்கள். அஜீரணம், தூக்கமின்மை வரலாம். செந்தில்நாதன் வழிபாடு செழிக்கச் செய்யும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!

காட்டு யானைகளுக்கும் நாட்டு யானைகளுக்கும் கடும் மன அழுத்தம்… கர்ப்பமடைய முடியாத சோகம்!

அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share