கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: உத்தரம்!

Published On:

| By Kavi

Karthigai month Uthiram Natchathira Palan 2024

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

உத்தரம்

அடக்கமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். செயலையும் வார்த்தைகளையும் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். பணியிடத்தில் எல்லாம் தெரியும் என்பதைத் தவிருங்கள். உடனிருப்போர் தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

மேலதிகாரிகளால் புகழப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் மனஸ்தாபம் வரலாம். அலுவலகத்தில் எப்போதும் வார்த்தைகளில் நிதானம் இருக்கட்டும். கோப்புகளை பத்திரமாகக் கையாளுங்கள்.

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தம்பதியரிடையே வீண் கடுமை வேண்டாம். வாரிசுகள் விஷயத்தில் மனம்விட்டுப் பேசுங்கள். உறவுகளால் வரவும், ஆதாயமும் உண்டு. யாருக்காகவும் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும்.

செய்யும் தொழிலில் நேர்மையும் நிதானமும் முக்கியம். தரல் பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். அயல்நாட்டு வர்த்தகத் தடைகள் நீங்கும்.

அரசியலில் இருப்போர்க்கு திடீர் பதவி பெருமை சேர்க்கும். முகஸ்துதி நட்பிடம் கவனமாக இருங்கள். அரசுப் பணிகளில் உள்ளோர்க்கு ஏற்றம் நிச்சயம் வரும். அதற்கு இப்போதைய உக்கள் பொறுமையே காரணமாகும்.

கலைஞர்கள், படைப்பாளிகள் நிதானத்தைக் கடைபிடியுங்கள். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம்.மாணவர்களுக்கு அதிகாலைப் படிப்பு அவசியம். தொலை தூரப் பயணத்தில் இருட்டில்  இறங்க வேண்டாம். டென்ஷன், தூக்கமின்மை, நரம்பு, அடிவயிறு, தலை உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு மகிழ்ச்சி சேர்க்கும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்:பூரம்!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்:மகம்!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம்!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share