கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : திருவாதிரை!

Published On:

| By Kavi

Karthigai month Thiruvathirai Natchathira Palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

திருவாதிரை

அனைத்திலும் நன்மைகள் தொடர, அடக்கமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஒருபோதும் கூடாது. பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது.

சக ஊழியர்களின் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். எதிர்பாராத இடமாற்றம் வந்தாலும் அது ஏற்றத்தையே தரும். பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம்.

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். எதிர்பார்த்த கடன்கள் கைகூடும். தடைபட்ட வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும். வாரிசுகள் வாழ்வில் நல்லவை நடக்கும். வீண் வாக்குவாதம் தவிருங்கள்.

செய்யும் தொழிலில் நிதானமே நல்லது. புதிய முதலீடுகளில் அவசரம் கூடாது. தரல்பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள்.

அரசியலில் இருப்போர்க்கு அடக்கமே ஆதரவை நிலைக்கச் செய்யும். அரசுத்துறையில் பணி செய்வோர்க்கு சீரான போக்கு நிலவ, நேரான செயல்பாடுகள் முக்கியம். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம்.

கலை, படைப்புத்துறையில் உள்ளோர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். மாணவர்களுக்கு அதிகாலைப்படிப்பே உயர்வுதரும். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். தூக்கமின்மை, தலைவலி, அடிவயிறு உபாதைகள் வரலாம். நடராஜர் வழிபாடு நன்மைகள் தரும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share