யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
சுவாதி
நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். இந்த சமயத்தில் நாவடக்கம் மிகமிக முக்கியம். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டால், சுமுகமான சூழல் நிலவும். உயரதிகாரிகள் ஆதரவினால், ஏற்றமும் மாற்றமும் வரும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு வரும்.
வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியத் தடைகள் விலகும். குலதெய்வ பூர்வீக சொத்துகள் சேரும். பெண்களுக்கு யோகமான காலகட்டமிது.
உங்கள் தொழிலில் உயர்வுகள் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் சிறக்கும். அரசுப் பணிபுரிவோர் அமைதியாகச் செயல்படுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையிடவேண்டாம்.
அரசியலில் இருப்போருக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி வந்துசேரும். எழுத்தாளர்கள், கலைத்துறையினர், சினிமா, ,படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள்வரும்.
படிப்பில் சோம்பலில்லா மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் அதிகரிக்கும். பயணங்களில் வேகம் வேண்டாம். நரம்பு, காது, மூக்கு, தொண்டைபிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. மகாலக்ஷ்மி வழிபாடு மங்களங்கள் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)
‘அமரன் ‘ முகுந்தின் கடைசி 15 நிமிடங்கள்… உண்மையை சொன்ன நண்பர்!
பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை!
இந்திக்கு மாறிய எல்.ஐ.சி வலைத்தளம்… இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் : ஸ்டாலின் கண்டனம்!
எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?