கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

ADVERTISEMENT

ரோகிணி

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அதை தலைகனம் ஆக்காத வரை உயர்வுகள் தொடரும். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடனிருப்போர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கோப்புகளை பத்திரமாக வையுங்கள்.

ADVERTISEMENT

பணி சார்ந்த பயணத்தில் நிதானம் முக்கியம் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடிவரும், தவிர்க்க வேண்டாம்.

குடுபத்தில் நிம்மதி நிலவும். உங்கள் வார்த்தைகளில் கடுமை தவிருங்கள். வாழ்க்கைத்துணை ஆரோக்யத்தில் அக்கறை முக்கியம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும்.

ADVERTISEMENT

எதிர்பாலரிடம் கவனமாகப் பழகுங்கள். செய்யும் தொழிலில் சின்சியரான செயல்பாடு முக்கியம். வர்த்தக முதலீடுகளை நிதானித்து செய்யுங்கள். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் முக்கியம்.

அரசியல் துறையில் உள்ளோர்க்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருங்கள். அரசுத்துறைப் பணிகளில் உள்ளோர் பணத்தை கவனமாகக் கையாளுங்கள். பணியிட ரகசியத்தை பிறரிடம் பகிர வேண்டாம்.

கலைஞர்கள், படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் மறதியை மறப்பது நல்லது. பயணத்தில் வேகம் வேண்டாம். முக உறுப்பு, கழிவு உறுப்பு, காய்ச்சல் உபாதை வரலாம். திருமால் வழிபாடு தித்திக்கச் செய்யும்.

https://youtu.be/kdjjbu5RZe0?si=HApQTIFcbAWExnms

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

கீர்த்தி சுரேஷ் கல்யாணம் கட்டும் ஆண்டனி தாட்டில் யார்?

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!

அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share