கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

Published On:

| By Kavi

Karthigai month Punarpoosam Natchathira Palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

புனர்பூசம்

அமைதியாகச் செயல்பட்டால் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் சின்சியராகச் செயல்பட்டால், சீரான நன்மைகள் ஏற்படும்.  திட்டமிட்டுச் செயல்பட்டால், சாதகமான சூழல் நிலவும்.

சக ஊழியர்களிடம் சச்சரவு எதுவும் வேண்டாம். கோப்புகளை பத்திரமாக வையுங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு வரலாம்.

இல்லத்தில் ஒற்றுமை நிலவும். அது நிலைக்க வார்த்தைகளில் நிதானம் முக்கியம். பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். உறவுகள் யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை ஏற்படும்.

செய்யும் தொழில் எதுவானாலும் நேரடி கவனம் முக்கியம். சட்டபூர்வ அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். பூமி சார்ந்த வர்த்தகத்தில் நிதானம் தேவை.

அரசியல் சார்ந்தவர்களுக்கு உடனிருப்போர் ஒத்துழைப்பு கிட்டும். மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சும் கூடாது. அரசுத் துறைகளில் உள்ளோர், அவசரப்பட வேண்டாம். எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கிட்டும்.

கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கூடா நட்பை உடனே உதறுங்கள். மாணவர்களுக்கு சோம்பல் கூடவே கூடாது. தொலைதூரப் பயணங்களை பகலில் மேற்கொள்ளுங்கள். நரம்பு, கழுத்து, முதுகு மன அழுத்த உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

கீர்த்தி சுரேஷ் கல்யாணம் கட்டும் ஆண்டனி தாட்டில் யார்?

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!

அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share