கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : பூசம்!

Published On:

| By Kavi

Karthigai month Poosam Natchathira Palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

பூசம்

நிதானம் தேவைப்படும் காலகட்டம். அதேசமயம் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், பொறுமைக்குப் பரிசாக சீரான உயர்வுகளும் வரும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும்.

உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். அது, சிலருக்கு பதவி உயர்வுடன் சேர்ந்து வரும். பொறுப்புகளில் அலட்சியம் கூடாது.

வீட்டில் சீரான அமைதி நிலவும். சின்னச் சின்ன வாக்குவாதங்களும் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்தில் வீண் பிடிவாதம் வேண்டாம்.

கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். செய்யும் தொழிலில் உயர்வுக்கு உத்தரவாதம் கிட்டும். ஊகம் சார்ந்த வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். வங்கிக் கடன் அட்டைகளை பத்திரமாக வையுங்கள்.

அரசியலில் உள்ளோர்க்கு ஏற்றமான சூழல் உருவாகும். புறம் பேசும் நபர்களை உடனே விலக்குங்கள். அரசுத்துறையில் இருப்போருக்கு அனுகூலமான சூழல் நிலவும். சட்டப்புறம்பில் கனவிலும் ஈடுபட வேண்டாம்.

கலை, படைப்புத்துறையினர்க்கு வாய்ப்புகளில் அவசரம் வேண்டாம். படைப்பு ரகசியங்களைப் பகிராதீர்கள். வாகனத்தில் சிறு பழுதும் உடன் கவனியுங்கள். அலர்ஜி, அஜீரணம், தலைவலி உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?

பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ் எப்போது?

கீர்த்தி சுரேஷ் கல்யாணம் கட்டும் ஆண்டனி தாட்டில் யார்?

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!

அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share