கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: பூரட்டாதி!

Published On:

| By Kavi

purattasi month Pooratathi nakshatra palan 2024

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

ADVERTISEMENT

பூரட்டாதி

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தலைநிமிர்ந்து நடக்கும் காலகட்டம். உங்கள் தனித்திறமை வெளிப்பட தலைகனம் இல்லா செயல்பாடுகள் முக்கியம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு உண்டு.

ADVERTISEMENT

உடனிருப்போரிடம் உரசல் வேண்டாம். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். அயல்நாட்டுப் பயணவாய்ப்பு தள்ளிப்போகலாம், ஆனால் அது நன்மையாகவே இருக்கும்.

இல்லத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். குலதெய்வ வழிபாட்டிற்கு நேரம் அமையும். குழந்தைகளால் பெருமை சேரும்.

ADVERTISEMENT

யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். பழைய கடன்களை முழுமையாகப் பைசல் செய்யுங்கள். பெண்கள் ஹார்மோன் உபாதையில் அலட்சியம் வேண்டாம்.

தொழிலாக எதைச் செய்தாலும் அதில் தளரா முயற்சிகள் முக்கியம். சட்டப்புறம்பான எதற்கும் வர்த்தகத்தில் இடம்தர வேண்டாம். கடன் அட்டைகளை பத்திரமாக வைத்திருங்கள்.

அரசியலில் இருப்பவர்கள் தலைகனத்தைத் தவிர்ப்பது முக்கியம். பொது இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வீண் வாக்குறுதிகள் வேண்டாம். அரசுப்பணி செய்பவர்கள் உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு. பணியிட ரகசியங்களை யாரிடமும் பகிராதீர்கள்.

கலைத்துறை, சினிமா, படைப்புத்துறை, இசைக்கலைஞர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் வரும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.

பூச்சிக்கடி, நரம்பு, எலும்புதேய்மானம், பல், மூட்டு உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு ஏற்றம் தரும்.

https://youtu.be/kdjjbu5RZe0?si=HApQTIFcbAWExnms

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : திருவாதிரை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

40 முறை சிறை சென்றவர்… யார் இந்த மைக் டைசன்?

‘இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி நடத்த முடியாது’ : பாகிஸ்தானிடத்தில் ஐசிசி உறுதி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share