கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்:பூரம்!

Published On:

| By Kavi

purattasi month Pooram nakshatra palan 2024

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

பூரம்

நிதானமாகச்  செயல்பட்டால், நினைத்தவை நடக்கும் காலகட்டம். எந்த சமயத்திலும் திட்டமிட்டுச் செயல்படுவதே நல்லது. பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். தயக்கம் தவிருங்கள். அதேசமயம், துணிவை விட பணிவே நல்லது.

உயரதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். சக ஊழியர்களிடம் ரகசியம் எதுவும் பகிர வேண்டாம். கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள். மனதை அலைபாயவிடுவதை தவிருங்கள்.

வீட்டில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். சுபகாரியங்களில் வீண் ஆடம்பரம் வேண்டாம். உங்கள் உடல்நலம் சீராகும்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். எதிர்பார்த்த அயல்நாட்டு வர்த்தகம் கைகூடிவரும் சூழல் உருவாகும். யாருக்கும் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம்.

அரசியலில் இருப்போர்க்கு எதிர்பாராத பதவி, பாராட்டு கிட்டிட வாய்ப்பு உண்டு. மேலிடத்தின் அன்புக்குப் பாத்திரராவீர்கள். அரசுப்பணி புரிபவர்களுக்கு சாதகங்கள் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பாராட்டு,பெருமை சேர்க்கும்.

கலைஞர்கள், படைப்பாளிகள் புகழப்படுவீர்கள். உங்கள் செயல்களும் மதிக்கும் வகையில் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். வாகனத்தை போதுமான ஓய்வு இன்றி ஓட்ட வேண்டாம். காது, மூக்கு, தொண்டை, கழுத்து உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு பெருமைகள் சேர்க்கும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

‘அமரன் ‘ முகுந்தின் கடைசி 15 நிமிடங்கள்… உண்மையை சொன்ன நண்பர்!

பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை!

இந்திக்கு மாறிய எல்.ஐ.சி வலைத்தளம்… இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் : ஸ்டாலின் கண்டனம்!

எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share