கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: மூலம்!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

மூலம்

நிதானமாகச் செயல்பட்டால், நினைத்தவை நடக்கக்கூடிய காலகட்டம். பிறர் பேச்சுக்குத் தலையாட்டுவதை அறவே தவிருங்கள். அலுவலகத்தில் திறமைக்கு உரிய உயர்வு உண்டு. உயரதிகாரிகளிடம் பேசும்போது பணிவு முக்கியம்.

உடனிருப்போர் விஷயத்தில் உங்கள் தலையீடு கூடாது. இடமாற்றம் உங்கள் இஷ்டம்போல் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு. முகஸ்துதி நபர்களை முதல்வேலையாக ஒதுக்குங்கள்.

இல்லத்தில் சீரான போக்கு நிலவும். வரவை சேமிக்கப்பழகுவது நல்லது. உறவுகளை உதாசீனப்படுத்துவது கூடாது. வாரிசுகளிடம் அன்பாகப் பழகுவது நல்லது. அசையும் அசையா சொத்து சேரும். பெண்களுக்கு அடக்கம் இருந்தால், அனைத்தும் ஜெயமாகும்.

எந்தத் தொழிலிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள். வீண் கடன்களைத் தவிருங்கள்.

அரசியல் துறையில் உள்ளோர், அமைதியாய் இருந்தால் அனைத்தும் கைகூடும். மேலிடத்திடம் கனவிலும் உரசல் வேண்டாம். அரசுப்பணி செய்வோர், கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். பணத்தைக் கையாளும் பணியில் கவனச் சிதறல் கூடாது.

கலை, படைப்பு, சினிமா, இசைத் துறையினருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. செல்லும் இடத்தின் சட்டங்களை மீறாமல் இருப்பது முக்கியம்.

வாகனத்தில் பழுது இருப்பின் உடனே சரி செய்யுங்கள். கழுத்து, முதுகுத்தண்டுவடம், கழிவு உறுப்பு பிரச்னைகள் வரலாம். குருபகவான் வழிபாடு, குறைவற்ற நன்மை தரும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!

காட்டு யானைகளுக்கும் நாட்டு யானைகளுக்கும் கடும் மன அழுத்தம்… கர்ப்பமடைய முடியாத சோகம்!

அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share