-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
கிருத்திகை
வாக்கில் கவனம் இருந்தால், வாழ்க்கையில் ஏற்றம் வரும் காலகட்டம். எந்த சமயத்திலும் நிதானம் தவற வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். அதேசமயம், சக ஊழியர்களிடம் வேண்டாத பேச்சும், வீண் ரோஷமும் தவிருங்கள்.
உங்கள் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது நல்லது. மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். அது நிலைக்க, விட்டுக் கொடுப்பது முக்கியம். தம்பதியர் இடையே அன்யோன்யம் உண்டாகும். வீடு, வாகனம் புதுப்பிக்க நேரம் வரும். அநாவசியக் கடன்களைத் தவிருங்கள். வாரிசுகளிடம் வீண் கடுமை தவிருங்கள்.
செய்யும் தொழிலில் முறையான முயற்சிகள் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டப்புறம்புக்கு இடம்தரவேண்டாம். பத்திரங்களை பத்திரமாக வையுங்கள்.
அரசியலில் உள்ளோர் அமைதியைக் கடைபிடிப்பதே ஆதாயம்தரும். மேலிடத்திடம் தர்க்கம் தவிருங்கள். அரசுப்பணி செய்வோர் நிதானமாக இருங்கள். பணியிட ரகசியத்தை யாரிடமும் பகிர வேண்டாம்.
மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம். கலை, படைப்புத் துறையினர்க்கு வளர்ச்சி உண்டு. இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள். ரத்த அழுத்த மாற்றம், சளித்தொல்லை, முதுகுத்தண்டுவட உபாதைகள் வரலாம். சுதர்சனர் வழிபாடு சுபிட்சம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!
டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!
அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!
ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க விரும்புபவர்களே… உங்களுக்கான ஆலோசனைகள் இதோ!
பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கிருச்சு!