கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: கேட்டை!

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

கேட்டை

எண்ணம்போல ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் காலகட்டம். இந்த சமயத்தில் சோம்பலை விரட்டுவதும், தலைகனம் தவிர்ப்பதும் அவசியம். அலுவலகத்தில் ஆதரவான சூழல் உருவாகும். பதவி, பாராட்டுகள், மனம்போல கிட்டும்.

மேன்மைகள் வரும் சமயத்தில், உங்கள் செயல்களும் மேலானதாக இருந்தால் எதிர்காலத்திலும் ஏற்றம் தொடரும். எந்தப் பொறுப்பையும் உடனுக்குடன் செய்துமுடிப்பது நல்லது.

வீட்டில் விசேஷங்கள் வர ஆரம்பிக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சி நிறையும். சுபகாரியத் தடைகள் விலகும்க. வரவு சீராக இருக்கும்க. வீடு, வாகனங்கள் மாற்ற புதுப்பிக்க நேரம் வரும். தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாக ஏற்படும். அயல்நாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும்.,

அரசியலில் உள்ளவர்களுக்கு அந்தஸ்து அதிகரிக்கும். அரசுப்பணி புரிகின்றவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்றம் ஏற்படும். பொறுப்பை நேரடியாக கவனிப்பது அவசியம். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும்.

கலை, எழுத்து, சினிமா படைப்புத் துறையில் உள்ளவர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும் சிலருக்கு அரசுவழி பாராட்டும் பரிசும் கிட்டும்க.

மாணவர்கள் மனம்போல மதிப்பெண் உயரும். வாகனப் பழுதை உடன் சீர்செய்வது அவசியம். ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னைகள் வரலாம். சனிபகவான் வழிபாடு சங்கடங்கள் போக்கும்.

அதிர்ஷ்டம் உங்கள் பிறந்த தேதிகளில் | கார்த்திகை மாதம் எண் கணித பலன்கள் |  | Astrologer Shelvi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!

காட்டு யானைகளுக்கும் நாட்டு யானைகளுக்கும் கடும் மன அழுத்தம்… கர்ப்பமடைய முடியாத சோகம்!

அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share