-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
சித்திரை
முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம். சுணக்கம் தவிர்த்தாலே சுபிட்சங்கள் வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் கைகூடிவரும். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம்.
எந்தப் பொறுப்பையும் தட்டிக்கழிக்காமல் ஏற்றுச்செய்யுங்கள். இடமாற்றம் தள்ளிப்போனாலும் நிச்சயம் வந்து சேரும், பொறுமையாக இருங்கள்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். குழந்தைகளின் செயல்கள் பெருமை சேர்க்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடிவரும். இளம்வயதினரின் காதல்பெற்றோரால் ஏற்கப்படும்.
அசையும் அசையா சொத்து சேரும். எந்தத் தொழில் செய்கிறீர்களோ அதில் முழுமையான கவனம் செலுத்துங்கள். வர்த்தகக் கடன்கள் சுலபமாக அடைபடும். ஒப்பந்தங்களில் கவனம்தேவை. மங்கையர்க்கு மங்களங்கள் சேரக்கூடிய ஆண்டு.
அரசியல் சார்ந்தவர்கள், பொதுஇடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். அரசுப்பணிபுரிவோர், கையெழுத்துப்போடும்போது கவனமாக இருங்கள்.
எழுத்தாளர்கள், சினிமா, கலைத்துறை, பத்திரிகைத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நன்மைதரும். வாகனத்தில் நிதானம் முக்கியம்… ரத்த அழுத்த மாற்றம், நரம்பு, எலும்பு பிரச்னைகள் வரவாய்ப்பு உண்டு. பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)
‘அமரன் ‘ முகுந்தின் கடைசி 15 நிமிடங்கள்… உண்மையை சொன்ன நண்பர்!
பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை!
இந்திக்கு மாறிய எல்.ஐ.சி வலைத்தளம்… இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் : ஸ்டாலின் கண்டனம்!
எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?