கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை) 

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

ADVERTISEMENT

அஸ்வினி

எண்ணம்போல் ஏற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். அதேசமயம், சோம்பல் கூடவே கூடாது. பணியிடத்தில் பெருமைகள் வந்து சேரும். இடமாற்றம், ஊதிய உயர்வுகள் கைகூடிவரும். சக ஊழியர்களிடம் வீண் சச்சரவு வேண்டாம்.

ADVERTISEMENT

திட்டமிட்டும், சோம்பலின்றியும் செயல்படுங்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு உண்டாகும். உறவுகளால் நன்மை ஏற்படும். சுபகாரியத் தடைகள் தகரும்.

வீண் ரோஷம் தவிருங்கள். செய்யும் வர்த்தகத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் நிதானமே நல்லது. வர்த்தகக் கடன்களை தேவையின்றி வாங்க வேண்டாம்.

ADVERTISEMENT

கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். அரசியலில் உள்ளோர்  சட்டப்புறம்பை கனவிலும் நினைக்க வேண்டாம். அரசுப்பணியில் உள்ளோர் கையெழுத்திடும்போது கவனமாக இருங்கள்.

மாணவர்கள் மனம்போல மதிப்பு உயரும். வாகனத்தில் வேகம் தவிருங்கள். நரம்பு, அடிவயிறு, கண் உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

https://youtu.be/kdjjbu5RZe0?si=HApQTIFcbAWExnms

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!

அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க விரும்புபவர்களே… உங்களுக்கான ஆலோசனைகள் இதோ!

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கிருச்சு!

பியூட்டி டிப்ஸ்: கருந்திட்டுகள் காணாமல் போக!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share