-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
அனுஷம்
கவனமாகச் செயல்பட்டால், சந்தோஷம் அதிகரிக்கும் காலகட்டம், எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். அலுவலகத்தில் அவசரம், அலட்சியம் கூடவே கூடாது.
பணத்தைக் கையாள்வதில் நிதானம் தேவை. யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், எல்லா உயர்வுகளும் படிப்படியாக வந்து சேரும். புறம் பேசும் நபர்களைப் புறம்தள்ளுங்கள்.
வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். அது தொடர, விட்டுக்கொடுத்தல் முக்கியம். தம்பதியரிடையே மூன்றாம்நபரை அனுமதிக்க வேண்டாம். விசேஷங்கள் தொடர்ச்சியாக வர ஆரம்பிக்கும்.
வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. பெண்கள், சமையல் அறையில் கவனமா இருங்கள்.
தொழிலில் சோம்பல் தவிர்த்தால், செழிப்பு ஏற்படும். கூட்டுத் தொழிலில் சந்தேகம் கூடாது அரசியல் துறையில் இருப்போர் நிதானத்தைக் கையாள்வது அவசியம். யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம்.
அரசாங்கத் துறையில் உள்ளோர், புறம்பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். கலை,சினிமா, எழுத்து, நாடகம், இசைத்துறையில் உள்ளோருக்குஏற்றமான சூழல் உருவாகும்.
படிக்கும் மாணவர்கள் சகவாசத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர்ப் பயணத்தைப் பகலில் மேற்கொள்வது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : ரோகிணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!
காட்டு யானைகளுக்கும் நாட்டு யானைகளுக்கும் கடும் மன அழுத்தம்… கர்ப்பமடைய முடியாத சோகம்!
அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!