”அப்போ வாட்டர் பாட்டில்… இப்போ அதுக்கும் மேல” : சர்தார் 2 குறித்து கார்த்தி பேச்சு!

Published On:

| By christopher

karthi shares his fear about ps mithran and sardar 2

இரும்புத் திரை, ஹீரோ படங்களைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. karthi shares his fear about ps mithran and sardar 2

இத்திரைப்படத்தில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். அவருடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

சர்தார் படத்தின் முடிவில் சர்தார் 2 படத்திற்கான லூப் காட்டப்பட்டிருக்கும். அதன்படியே இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ரம்ஜானை முன்னிட்டு சர்தார் 2 படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. அதில் சீனாவில் கார்த்தி சண்டையிடுவது போலவும், தான் சாகும் நேரத்தில், “உன் நாட்டை நோக்கி ஒரு பிரளயம் வந்துட்டு இருக்கு” என வில்லன் எச்சரிப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.

அந்த பிரளயமாக, பிளாக் டாகர் என்ற பெயருடன் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான மாஸ் எண்ட்ரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்தார் 2 படக்குழு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “மித்ரன் என்றாலே ’அடுத்து என்ன சொல்லி பயமுறுத்தப் போகிறார்’ என்று கேட்கிறார்கள். அவர் இயக்கிய படங்களால் மொபைல் போன் மெசேஜ், வாட்டர் பாட்டில் போன்றவற்றை பார்த்தாலே பயம் வருகிறது. இப்போது அதை விட பயமுறுத்தும் ஒரு விசயத்தை கையில் எடுத்திருக்கிறார் மித்ரன்.

ஹீரோ பெரிதாக தெரிவதற்கு, வில்லனும் பவரானவராக இருக்க வேண்டும். அதன்படி இந்த படத்தில் ஒரு பயங்கரமான வில்லனாக எஸ்.ஜே. சூர்யா இணைந்ததில் மகிழ்ச்சி. அவருக்கு எவ்வளவு தீனி கொடுத்தாலும் பத்தாது. அவர் நடிக்க வந்தால் நாங்கள் செல்போனையே எடுக்க மாட்டோம்” என்று கார்த்தி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share