இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் போன்ற வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.
அவரது இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சர்தார் படத்தின் முடிவில் பார்ட் 2 க்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனை தொடர்ந்து சர்தார் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது சர்தார் 2 படத்தின் படப்பிடிப்புற்கான முதற்கட்ட பணிகளை இயக்குனர் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வரும் மார்ச் மாதம் சர்தார் 2 படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட அதிக பொருட்செலவில் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி : பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் நேரில் ஆய்வு!
ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை :ஆளுநர் ஒப்புதல்!