பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சர்தார் 2’ படத்தின் டீசர் இன்று (மார்ச் 31) வெளியாகியுள்ளது. karthi action packed Sardar 2
கடந்த 2022-ஆம் ஆண்டு கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் வெளியானது. உளவாளிகளின் வாழ்க்கை, தண்ணீர் மாஃபியாவை கருவாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வந்தது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘சர்தார் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில், ‘சர்தார் 2’ படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தொடக்க காட்சியில் கத்தி சண்டை போட்டு மிரட்டுகிறார் கார்த்தி. அப்போது, “உன் நாட்டை நோக்கி ஒரு பிரளயம் வந்துகொண்டிருக்கிறது. Black Dragon is coming. ஒரு மிகப்பெரிய போர் உருவாகப் போகிறது. முடிஞ்சா உன்னையும் உன் நாட்டையும் காப்பாத்திக்கோ” என்று வில்லன் எச்சரிக்கிறார். அப்போது, எஸ்.ஜே.சூர்யா புகைப்பிடித்துக்கொண்டு மாஸாக ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
இறுதியில், “போர்னு வந்தததுக்கு அப்புறம் நாங்க எதையும் பார்க்குறதில்லை” என்று கார்த்தி பேசும் பஞ்ச் வசனத்துடன் டீசர் முடிவடைகிறது. ‘சர்தார் 2’ டீசர் கார்த்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. karthi action packed Sardar 2
