தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் இவரது 25 வது படமான ஜப்பான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு பிறகு தற்போது 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி உடன் நடிகர் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க, 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது கார்த்தி 27 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.கார்த்தி 27 படத்திற்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் சாமி சைக்கிள் ஓட்டுவதும், கார்த்தி சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து வருவது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
96 படத்தை தொடர்ந்து பிரேம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இந்த படம் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மெய்யழகன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் 26 வது படம் குறித்த அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தொடர்ந்து சர்தார் 2, கைதி 2, தீரன் 2 ஆகிய படங்கள் கார்த்தியின் லைன் அப்பில் உள்ளது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்? – கார்கே சொல்லும் கணக்கு
முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!