எம். ஜி. ஆர் ரசிகராக கார்த்தி… படத்தின் டைட்டில் இதோ!

Published On:

| By Selvam

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் முன்பாக நேற்று (மே 24) கார்த்தியின் 27 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கும் கார்த்தி 27 படத்திற்கு “மெய்யழகன்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இன்று (மே 25) கார்த்தியின் பிறந்தநாளுக்கு கார்த்தி 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கி நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்தில் நடித்துள்ளார்.

கார்த்தி 26 படத்திற்கு “வா வாத்தியார்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரெட் கலர் கண்ணாடி, வித்தியாசமான போலீஸ் உடை என கார்த்தி செம கிளாஸ் ஆக போஸ் கொடுக்க, அவரை சுற்றி எம். ஜி. ஆரை போல வேடமிட்ட பலர் நின்றுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, நடிகர்கள் கௌதம் கார்த்திக், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள “வா வாத்தியார்” ஒரு பக்கா ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் ராஜ் கிரண் தாத்தா, பேரன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், இவர்கள் இருவருமே இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக நடித்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் கார்த்தியின் இரண்டு படங்கள் குறித்த அப்டேட் வெளியானதால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகம் பொங்க கொண்டாடி வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடி தெய்வமகன் கிடையாது: அம்பேத்கர் சுடர் விருது பெற்ற பிரகாஷ்ராஜ் விளாசல்!

அஜித்தை வியக்க வைத்த கங்குவா.. AK 64 இயக்குநர் சிவா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share