பெண் கலெக்டருக்கு பல அதிகாரிகளுடன் தொடர்பு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!

Published On:

| By Kalai

Karnataka IPS officer sensational allegation

ஐ.ஏ.எஸ்.அதிகாரி ரோகிணி சிந்தூரி பல அதிகாரிகளுடன் நெருக்கமாக உள்ளதாகவும் பல விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கர்நாடக அறநிலையத் துறை ஆணையராக தற்பொழுது பணியாற்றி வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி.

ADVERTISEMENT

இவர் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த ரூபாதான் சசிகலா கர்நாடக சிறையில் இருந்தபோது, அவர் ஷாப்பிங் சென்று வந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டவர்.

ADVERTISEMENT

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தினமும் ரோகிணி அனுப்பும் படங்கள் இவை என சில படங்களை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், கோலாரில் பணியில் இருந்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி தற்கொலை செய்து கொண்டதற்கு ரோகிணி தான் காரணம்.

ADVERTISEMENT

ரவி இவருடன் நெருங்கி பழக இடம் கொடுத்த காரணமாக ரவி அவரது குடும்பத்தினருடன் இருந்து பிரிய நேரிட்டது.

இது போல பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. ஜாலஹள்ளியில் அவரது கணவர் பெரிய வீடு கட்டி இருக்கிறார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அசையா சொத்துகள் பற்றி தெரிவிக்க வேண்டும். ரோகிணி சிந்தூரி தெரிவிக்கவில்லை என்று ரூபா அடுக்கடுக்கான 19 குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ள நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

39 வயதான ரோகிணி, மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது கே.ஆர்.நகர் ம.ஜ.த எம்.எல்.ஏ வான சா.ரா. மகேஷ் உடன் மோதல் போக்கை கடைப்பிடித்து, அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது உண்மை என்று நிரூபித்த நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணன் மூலமாக சா.ரா.மகேணை சந்தித்து ரோகிணி சிந்தூரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதை  சா.ரா.மகேஷ் ஒத்துக் கொண்டுள்ளார். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சமாதானத்திற்கு செல்வதை முதல் முறையாக பார்க்கிறேன்.

இது எவ்வாறு சாத்தியம் என்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும் இடையே திடீரென்று ஏற்பட்டுள்ள மோதலுக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

அவருக்கு சாதகமாக அரசு செயல்படுவதாக ரூபா கருதுவதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தன் மீது ரூபா கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரோகிணி, ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share