நாற்காலிக்காக சண்டையிட்டுக் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்!

Published On:

| By Prakash

நாற்காலிக்காக இரு காங்கிரஸ் தலைவர்கள் சண்டை போட்டுக்கொண்டது அக்கட்சியில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் ஆரம்பித்த அவரது நடைப்பயணம், சமீபத்தில் தலைநகர் டெல்லி வந்தடைந்தது.

அதில் ராகுலின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

டெல்லி நடைப்பயணத்தின்போது, சீனா குறித்து ராகுல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவருக்கு முறையாக பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

அதற்கு சி.ஆர்.பி.எஃப், ‘ராகுல் பலமுறை பாதுகாப்பு வளைத்தை மீறியுள்ளார்’ எனப் பதில் அளித்துள்ளது. தற்போது ராகுல் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதில் உள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான இர்பான் ஷேக் மற்றும் என்ஆர்.தம்புலி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில், யார் முன்னே அமர்வது, யார் பின்னே அமர்வது என அமர்வதற்காக சண்டை போட்டுக்கொண்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுடைய சண்டையைக் கட்டுப்படுத்த கட்சித் தொண்டர்கள் அதிக சிரமப்பட்டனர்.

ஏற்கெனவே கோஷ்டி மோதல், அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு, மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு, இளம்தலைவர்கள் மாற்றுக் கட்சிக்குத் தாவுதல், டிக்கெட் வழங்குவதில் குழப்பம், தலைவர்களின் மந்தமான செயல்பாடு, அரசு எடுக்கும் முடிவுகளுக்குப் பதிலடி கொடுக்காதது, சரியான எதிர்க்கட்சியாகச் செயல்படாதது. மேலும், காங்கிரஸ் கட்சியானது, மக்களுடனான முழுத் தொடர்பையும் இழந்துநிற்கிறது.

இப்படியான நிலையில், கர்நாடக மாநிலத்தில் இரு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாற்காலிக்காக சண்டையிட்டுக் கொண்டது அக்கட்சிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!

பாமக பற்றி பிரசாந்த் கிஷோர்: பொதுக்குழுவில் அன்புமணி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share