‘மராத்தி தெரியாதா?’ – கர்நாடகா டிரைவருக்கு நடந்த கொடுமை!

Published On:

| By Kumaresan M

கர்நாடகா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் மகாராஷ்டிர மாநிலத்தை ஒட்டி பெலகாவி, பீடர், கார்வார் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன.

இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளை கர்நாடகாவிலிருந்து பிரித்து மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது அந்த மாநில மக்களின் கோரிக்கை. Karnataka bus conductor assaulted

இதனால், அவ்வப்போது எல்லை பகுதியில் கன்னட அமைப்பினர் மகாராஷ்டிர பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவது உண்டு. இதன் காரணமாக மகாராஷ்டிராவிலும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்குதலுக்குள்ளாகும். கர்நாடக அரசுப் பேருந்துகள் மீது கறுப்பு பெயின்ட் அடித்து, `ஜெய் மகாராஷ்டிரா’ என்று, சிவசேனா கட்சியினர் எழுதியதும் உண்டு.Karnataka bus conductor assaulted

இந்த நிலையில், வட மேற்கு கர்நாடக போக்குவரத்துக்கழக பேருந்து ஒட்டுநருக்கு மராத்தி தெரியவில்லை என்று கூறி சில இளைஞர்கள் பெலகாவியில் தாக்குதல் நடத்தினர்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கர்நாடக அரசு பேருந்தில் ஒரு இளைஞரும் பெண்ணும் ஏறியுள்ளனர். கர்நாடகத்திலும் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் அனுமதியுள்ளது. Karnataka bus conductor assaulted

ஆனால், அந்த பெண் பேருந்து கண்டக்டர் மாதவ் ஹக்கேரியிடத்தில் தனக்கும் தன்னுடன் வந்த இளைஞருக்கும் இலவச டிக்கெட் தர கேட்டுள்ளார். கண்டக்டர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கண்டக்டரை மராத்தியில் பேச கூறியுள்ளனர். அவரோ, தனக்கு மராத்தி தெரியாது என்று பதில் சொன்னார். Kus conductor assaulted

அப்போதே, பேருந்தில் இருந்த 7,8 பேர் கண்டக்டரை கடுமையாக தாக்கியுள்ளனர். பெலகுந்த்ரி என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, மேலும் 50 பேர் சேர்ந்து அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர், அவர்களும் கண்டக்டரை தாக்கியுள்ளனர். Karnataka bus conductor assaulted

தற்போது, காயமடைந்த கண்டக்டர் பெலகாவியிலுள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், கர்நாடகா மகாராஷ்டிரா மாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது. மராத்தி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் புனே நகரில் சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share