போஸ் கொடுக்கும் துரைமுருகனே வெள்ளத்துக்கு காரணம்: கராத்தே காட்டம்!

Published On:

| By Kavi

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்தான் பொறுப்பு என்று சென்னையின் முன்னாள்  துணை மேயரும் பாஜக மாநில செயலாளருமான கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மழை நீர் வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்பதால்தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன.

ADVERTISEMENT

ஒருவேளை மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டிருந்தாலும் கூட..  சென்னையில் உள்ள 16 கால்வாய்கள், 2 ஆறுகளில் முழுமையாக நீர் செல்லாததே வெள்ளத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன்.

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக  இன்று (டிசம்பர் 9) சென்னை வந்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மேற்கு மாம்பலத்தில் நிவாரண உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

இதில் மாநில  பாஜக  தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Image

ADVERTISEMENT

அப்போது  மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பேசிய கராத்தே தியாகராஜன், “ஒருநாள் மழைக்கே இவ்வளவு பிரச்சினைகளை சொல்கிறார்கள். அதிகாரிகளும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் இந்த வெள்ளத்துக்கு காரணமான ஒரு அமைச்சர் மட்டும் எட்டியே பார்க்கவில்லை. அவர் தான் இந்த வெள்ளத்துக்கு பொறுப்பு.

சென்னையில் மழைநீர் வடிகாலில் தண்ணீர் வந்தால் கூட அது 16 கால்வாய்களில் செல்லவில்லை. கூவம், அடையாற்றுக்கு தண்ணீர் செல்ல வேண்டும்.

இதற்கு மாநகராட்சி பொறுப்பு கிடையாது. இதற்கு  நீர்வளத்  துறை அமைச்சர் துரைமுருகன் தான்  பொறுப்பு.

16 கால்வாயிலும், 2 ஆற்றிலும் தூர் வாரப்படவில்லை. முழுமையாக இந்த 16 கால்வாயில் நீரோட்டம் போகவில்லை. கேப்டன் காட்டன் , மாம்பலம் உள்ளிட்ட  கால்வாய்களில் தண்ணீர் போகாததற்கு காரணம் தூர்வாராதுதான்.

இதற்கு நீர் மேலாண்மை துறை செயலாளர்கள், அதிகாரிகள்தான் பொறுப்பு. செம்பரம்பாக்கம், புழலுக்கு மட்டும் சென்று துரைமுருகன் போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

வெள்ளத்துக்கு பொறுப்பேற்று துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை முதல்வர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என்று காட்டமாக கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மழை நீரில் எண்ணெய் கழிவு: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

சேதமடைந்த சான்றிதழ்: சிறப்பு முகாம் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share