கராத்தே நிபுணரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி இன்று (மார்ச் 25) உடல்நலக்குறைவால் காலமானார். karate master hussaini passed away
மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஷிஹான் ஹுசைனி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் “நான் மீண்டு வருவேன்” என்று மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஷிஹான் ஹுசைனி மருத்துவமனையில் காலமானார்.
இன்று மாலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஹுசைனி மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும், அவரிடம் கராத்தே பயின்ற மாணவர்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.