காரைக்குடி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.

ADVERTISEMENT

இதில் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள்- தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

காரைக்குடி வாக்காளர்கள் -303,371

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 – நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ மாங்குடி மீண்டும் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மருத்துவர் பிரபு, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் களம் காண்கின்றனர்.

கடந்த இரண்டு முறையும் காங்கிரஸ் வென்ற தொகுதி காரைக்குடி. 2001ல் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த 2021 தேர்தலில் எச்.ராஜா 2-வது இடத்தை பிடித்தார். அமமுக தேர்போகி பாண்டியன் 3ஆவது இடத்தை பிடித்தார்.

இந்த முறை பாஜகவும் அமமுகவும் ஒரே கூட்டணியில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

நமது சர்வே முடிவின் படி,

திமுக- 30%
அதிமுக- 25%
தவெக-20%
நாதக-22% வாக்குகள் பெறும்.

காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரான மாங்குடி வெற்றிக் கனியை தட்டிச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share