குமரி கண்ணாடி பாலத்தில் 5 நாட்களுக்கு செல்ல தடை!

Published On:

| By christopher

kanniyakumar bridge ban for 5 days

ஆய்வுப் பணி காரணமாக கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் செல்ல வரும் ஏப்ரல்15 முதல் 5 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். kanniyakumar bridge ban for 5 days

இதுதொடர்பாக ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை காண நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பால கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ், அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை வருகிற 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வு நடைபெறும் 5 நாட்களும் கண்ணாடி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க படமாட்டார்கள். எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share