எந்த அயோத்தியை போல தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற நயினார் நகேந்திரனுக்கு கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது என்றார்.
நயினார் நகேந்திரனின் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனிமொழி எம்பி தனது எக்ஸ் பதிவில், “எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?
கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?
கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.
