மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் தமிழகத்துகென தனி அறிவிப்புகள் எதுவுமில்லை.
குறிப்பாக, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 3,548 கோடி கல்வி நிதி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன.
ஆனால் ஹைதராபாத் முதல் சென்னை, சென்னை முதல் பெங்களூரு வரை அதிவேக ரயில் வழித்தடம் உள்ளிட்ட ஒரு சில பொதுவான அறிவிப்புகளே வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் வழக்கம் போல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் வரப்போகும் நிலையிலும் கூட, மத்திய பா.ஜ.க அரசுக்கு இந்த பட்ஜெட்டில் தமிழகத்தை நினைக்க மனமில்லை. மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், “தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த நிதி அமைச்சர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
