மாநிலத்தையே அடகு வைத்தவர் எடப்பாடி – கனிமொழி எம்.பி விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய கூட்டணி. அதனால், அதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 20) கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இடைக்கால பட்ஜெட்டில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் எந்த அறிவிப்புகளும் வருவது இல்லை. ஆனால் அதை தாண்டி அதை அவர் ஒழுங்காக படித்துப் பார்த்தால் அதில் பல முக்கியமான, எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு, விளையாட்டுத் துறைக்கு தேவையான விஷயங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளது. ஏதோ ஒன்று வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது சரியானது அல்ல.”என்றார்.

ADVERTISEMENT

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜக தொடர்ந்து தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பாஜக கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டாலே போதும். அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளை பற்றி கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய கூட்டணி. அதனால், அதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.” என தெரிவித்தார்

மாநில சுயாட்சி குறித்து இப்போது திமுக பேசுவது குறித்த எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “மாநிலத்தையே கொண்டு போய் அடகு வைத்தவர் தான் எதிர் கட்சி தலைவர். திமுகவின் அடிப்படை கொள்கையே மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தான். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.” என காட்டமாக பதிலளித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share