திருச்செந்தூர்: உயிரிழந்த யானைப் பாகன் மனைவிக்கு அரசுப்பணி!

Published On:

| By Selvam

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிரிழந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கடந்த நவம்பர் 18-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான சிசுபாலனும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.

இந்தநிலையில், திருச்செந்தூர் வ.உ.சி. தெருவில் உள்ள யானைப் பாகன் உதயகுமார் வீட்டிற்கு நேரில் சென்ற கனிமொழி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், உயிரிழந்த யானைப்பாகன் மனைவிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்ற பணி நியமன ஆணையை வழங்கினார்.

தூத்துக்குடி சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எரிபொருள் விலை உயர்வு: இரு அவையிலும் அமளி!

ஆப்பிள் இறக்குமதிக்குத் தடை நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share