தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி இன்று (மார்ச் 26) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தென் மாவட்ட மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
பின்னர் மாலையில் நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரித்தார்.
பின்னர், தூத்துக்குடி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தூத்துக்குடி மாநகர பகுதியில் ராஜாஜி பூங்கா வாக்கிங் சென்றார். அப்போது அங்கு வந்த பொதுமக்களை சந்தித்து, அத்தொகுதியில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியின் முக்கிய சந்தையான காய்கனி மார்க்கெட்டில், காய்கறி வாங்க வந்த மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து அவர்களிடன் உதய சூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து பாளையங்கோட்டை சாலையில் நடந்து சென்று கனிமொழிக்கு ஆதரவு கோரினார்.
இதனையடுத்து, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி இன்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அப்போது அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முருகன் உட்பட மூவரும் ஒரு வாரத்தில் இலங்கை செல்வார்கள் : தமிழ்நாடு அரசு
மதிமுகவுக்கு பம்பரம்? தேர்தல் ஆணையம் சொன்ன முக்கிய பதில்!
CWC 5: என்னை நீங்கள் எதிர்பார்க்கலாம்… வெளிப்படையாக சொன்ன பிரபலம்!