திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழி நியமனம்!

Published On:

| By christopher

திமுக புதிய நாடாளுமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது.

Udhaykups (IT WING) DDC ????❤️ on X: "மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது ...

அப்போது  திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைக்கு சேர்த்து நாடாளுமன்றக் குழுத் தலைவராக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைக் குழுத் தலைவராக கட்சியின் பொருளாளரான டி.ஆர். பாலு எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைக் குழுத் துணைத் தலைவராக கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரான தயாநிதி மாறன் எம்.பி நியமனம் ஆகியுள்ளார்.

மக்களவைக் கொறடாவாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று, மாநிலங்களவைக் குழுத் தலைவராக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான திருச்சி சிவா எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளரான மு.சண்முகம் எம்.பி நியமனம் ஆகியுள்ளார்.

மாநிலங்களவைக் கொறடாவாக கட்சியின் தலைமை சட்ட ஆலோசகரான பி.வில்சன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அவைகளின் பொருளாளராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெகத்ரட்சகன் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மோடி 3.0 அமைச்சரவை : யார் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!

மோடி 3.0 அமைச்சரவை : அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் சிண்டேவும் அதிருப்தி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share