குஷ்பு பதிவு: மன்னிப்பு கேட்ட கனிமொழி!

Published On:

| By Prakash

பாஜக நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கெளதமி ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த திமுக நிர்வாகியின் பேச்சுக்கு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார்.

திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கடந்த அக்டோபர் 26ம் தேதி, சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கலந்துகொண்ட திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கெளதமி ஆகியோரை ஒருமையில் பேசியிருந்ததாக வீடியோ வெளியானது.

அவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

ADVERTISEMENT

“பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் வளர்ந்த விதத்தையும், அவர்கள் வளர்க்கப்பட்ட மோசமான சூழலையும் காட்டுகிறது.

kanimozhi apologies to bjp khushbu

ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று அழைக்கிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா?”

ADVERTISEMENT

என்று கேள்வி எழுப்பி, முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை டேக் செய்திருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த கனிமொழி, “ஒரு சக பெண்ணாகவும், மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதை யார் செய்திருந்தாலும், அது பேசப்பட்ட இடம், அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சி என்று எதுவாக இருந்தாலும் இதை ஏற்க முடியாது.

வெளிப்படையாக இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, கனிமொழியின் பதிவுக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். அதுபோல் பாஜக நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சைதை சாதிக்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ’பிபிசி தமிழ்’ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில்,

“மாற்றுக்கட்சி பெண்களை இழிவாக பேசுவது எங்கள் நோக்கம் கிடையாது. இதனால் குஷ்பு உள்ளிட்டவர்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Photo of author
Prakash
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share