”சும்மா தெறிக்குது”: கங்குவாவில் திஷா பதானியின் கதாபாத்திரம் இதுதான்!

Published On:

| By Manjula

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில், நடிகை திஷா பதானியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.

வில்லனாக பாபி தியோல் ‘உதிரன்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான பாபி தியோலின் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

வில்லன் கதாபாத்திரம் என்றாலும் படத்தில் அவருக்கும் ஒரு ஓபனிங் பாடல் இருக்கிறதாம். இந்த நிலையில் நாயகி திஷாவின் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் இதில் போர் வீராங்கனை வேடத்தில் நடித்து வரும் திஷாவிற்கு, மொத்தம் 5 சண்டைக்காட்சிகள் படத்தில் உள்ளதாம்.

இதனால் அவரின் கதாபாத்திரத்தை சிவா எப்படி வடிவமைத்து இருப்பார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. ‘கங்குவா’ மொத்த ஷூட்டிங்கும் முடிவுக்கு வந்துள்ளதால், விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா இதில் 6 கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் இப்படம் உலெகங்கும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள் : மீண்டும் தேதி அறிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி: பிரேம் ஆனந்த் சின்ஹா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share