‘கங்குவா’ டிரெய்லர் ரிலீஸ் தேதி இது தான்!

Published On:

| By christopher

'கங்குவா' டிரெய்லர் ரிலீஸ் தேதி இது தான்!

இயக்குநர் ‘ சிறுத்தை ‘ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ கங்குவா ‘ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ கங்குவா ‘. இந்தத் திரைப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய அப்படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது அந்தப் படத்தின் டிரெய்லர் வரும் ஆக. 12 ஆம் தேதி படத்தின் இயக்குநர் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில், பாபி தியோல், திஷா பட்டானி, ஜகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தத் திரைப்படம் பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.

Image

பீரியட் ஃபாண்டசி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தத் திரைப்படம் சுமார் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்ப முறையில் உலகெங்கும் வெளியாகிறது.

இதை ஸ்டூடியோ க்ரீன் மற்றும் யூ.வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் பல லட்ச பார்வையாளர்களைக் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

”இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல” : வயநாட்டை நேரில் கண்ட மோடி உருக்கம்!

குழந்தைகளே ரெடியாகுங்க… வந்துடுச்சி ‘முஃபாசா : தி லயன் கிங்’ டிரெய்லர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share